ஜனவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – முக்கிய நியமனங்கள்

நியமனங்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC January 2021 Current Affairs Important Appointments

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி S. பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையம் பிரிவு 21-ன் படி, ஏப்ரல் 17/1997ல் நிறுவப்பட்டது

மாநில மனித உரிமை ஆணையமானது ஒரு தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் (அ) 70 வயது வரை

தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற முறை நடுவராக மாலிக் பெரோஸ்கானை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.

தமிழக அரசின் 47வது தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் 46வது தலைமை செயலாளராக பதவி வகித்த சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையராக சரஸ்வதி ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசின் பிரதிநிதியாக சென்னை IIT இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் டி.ஜி.பி.யாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றி வந்த பி.என்.ராவ் ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற 50 – வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பங்கஜ் மித்தலுக்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஓடிஸா உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ். முரளிதருக்கு அம்மாநில ஆளுநர் கணேஷி லால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 - வது தலைமை நீதிபதியான சஞ்சீவ் பானர்ஜிக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆருப் குமார் கோஸ்வாமிக்கு ஆளுநர் பிஸ்வாப் புஷன் ஹரிச்சந்தன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுதன்ஷு துலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராகவேந்திர சிங் சௌகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் (ம) தலைமை நிர்வாக அதிகாரியாக சுனீத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் எஃகு ஆணையத்தின் (SAIL) முதல் பெண் தலைவராக Soma Mondal நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் தலைவரான கே.சிவன் அவர்களின் பதவி காலமானது (ஜனவரி 14, 2022 வரை) மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாக ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக, சோம்நாத் அறக்கட்டளையின் முதல் தலைவராக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவி வகித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் முன்னாள் புலனாய்வுத் தூதர் வில்லியம் ஜோ பர்ன்ஸ் என்பவரை CIA தலைவராக நியமித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் (நாடாளுமன்ற கீழவை) தலைவராக நான்சி பெலோசி நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண் நிதி மந்திரியாக (Treasury Secretary) Janet Yellen நியமிக்கப்பட்டுள்ளார்

USAID எனும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமையின் (United States Agency for International Development) தலைவராக சமந்தா பவரை ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் டிஜிட்டல் பிரிவு இயக்குனராக இந்திய அமெரிக்கரான கரிமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோ பைடனின் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு மந்திரியாக பணியாற்றிய ஜான் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் 3 புதிய துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க தொழிலதிபர் Bicon நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மஜும்தார் ஷா அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் துணைத் தலைவர்களாக மற்ற இரண்டு வணிக நிர்வாகிகளாக Amway தலைமை நிர்வாக அதிகாரி மிலிந்த் பான்ட் மற்றும் Nasdaq துணைத் தலைவராக இருக்கும் எட்வர்ட் நைட் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க வர்த்தக கவுன்சில் தலைவர் : நிஷா தேசாய் பிஸ்வால்

நிறுவப்பட்ட ஆண்டு : 1975

தலைமையகம் : வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா.

India Post Payment Bank - ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜே. வெங்கட்ராமு பொறுப்பேற்று கொண்டார்.

ஆசிய பசிபிக் பகுதியில் Google Cloud - ன் தலைவராக கரண் பாஜ்வா நியமனம்.

BIMSTEC-ன் புதிய பொதுச் செயலாளராக டென்ஜிங் லெக்பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Supreme Court Bar Association - ன் தலைவர் பதவியை Dushyant Dave ராஜினாமா செய்துள்ளார்.

Intel நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக Pat Gelsinger தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரியக் கூட்டங்களுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

LIC யின் புதிய தலைமை நிர்வாக இயக்குனராக சித்தார்த்தா மொஹந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

TEPCயின் புதிய தலைவராக சந்தீப் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

TEPC - Telecom Equipment and Services Export Promotion Council.

TCIL யின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

TCIL  – Telecommunications Consultants India Limited.

BCCC - ன் புதிய மற்றும் முதல் பெண் தலைவராக முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய முதல் பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

BCCC Broadcasting Content Complaints Council.

பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த திருமதி  பாப்பம்மாளை 'அங்கக வழி விவசாய உற்பத்தியாளர்களின் தூதர்' பட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) தலைவர் டாக்டர் M.அங்கமுத்து கேட்டுக் கொண்டார்.

APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments