ஜனவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – மறைந்த பிரபலங்கள்

மறைந்த பிரபலங்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC Current Affairs Celebrities who passed away in january 2021

நவீன முக அறுவை சிகிச்சையின் தந்தையாக விளங்கிய அமெரிக்க மருத்துவரான கென்னெத் எவரெட் சாலியர் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூட்டா சிங் காலமானார். இவர் 1986 முதல் 1989 வரை ராஜீவ்காந்தி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

சியாச்சின் மீட்பர் என்று பரவலாக அறியபடுபவரான கர்னல் நரேந்திர குமார் காலமானார்.

ஆபரேஷன் மேகதூத்தின் கீழ் பணியாற்றிய இவர், சியாச்சின் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை முதல் முதலில் கண்டறிந்தார்.

நந்தாதேவி மலைச் சிகரத்தை (7817மீ) அடைந்த முதல் இந்தியராவர்.

1965 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தையும் (8848மீ), பின்னர் கஞ்சன்ஜங்கா சிகரத்தையும் (8586மீ) ஏறி சாதனை படைத்துள்ளார்.

உலகின் பழைமையான முதல் தர கிரிக்கெட் வீரர் ஆலன் புர்கெஸ் தனது 100 வயதில் காலமானார்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றவருமான இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மைக்கேல் கின்டோ காலமானார்.

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான காலின் மெக்டொனால்ட் காலமானார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநரான உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாதா பிரசாத் காலமானார்.

நரேந்திர மோடிக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தில் நீண்ட கால முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மாதவ் சிங் சோலங்கி காலமானார். இவர் கடந்த 1976 முதல் 1990 வரை குஜராத் மாநில முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமெரிக்க எழுத்தாளரான வேத் மேத்தா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் கடந்த ஜனவரி 5, 2021 அன்று காலமானார்.

2009-ல் தமிழக அரசால் கலைமாணி விருதும்,

2015-ல் இலக்கிய சுவடு என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்திய அகடாமி விருதும் பெற்றவர்.

பிற நாவல்கள் : கிருஷ்ண பருந்து, புனலும் மணலும்

சிறுகதை தொகுப்பு : கடைத்தெரு கதைகள்.

ஈழ இலக்கியவாதியும், இலங்கையின் சாகித்திய மண்டல விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா காலமானார்.

நடத்திய இதழ் : மல்லிகை

பிரபல ஹிந்துஸ்தானி இசையமைப்பாளரான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் காலமானார். இவர் பத்ம விருதுகள் பெற்ற ஆண்டுகள் பின்வருமாறு :

1991பத்மஸ்ரீ விருது

2006பத்மபூஷன் விருது

2018பத்மவிபூஷண் விருது

2003சங்கீத நாடக அகாதமி விருது

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பெற்ற முக்கிய விருதுகள் பின்வருமாறு :

2005ராமன் மகசேசே விருது

பத்ம விருதுகள்

1956பத்மஸ்ரீ விருது

2006பத்மபூஷன் விருது.

2016பத்மவிபூஷண் விருது

நினைவு விருதுகள்

2011நாயுடம்மாள் நினைவு விருது

2013 அன்னை தெரசா நினைவு விருது

2013 அவ்வையார் விருது

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments