ஜனவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – விளையாட்டு நிகழ்வுகள்

விளையாட்டு நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC January 2021 Current Affairs Sports News

ICC டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து இரண்டாம் இடத்திலும் முன்னதாக முதலிடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ICC யின் டெஸ்ட் தரவரிசையில், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்தியாவின் ரிஷப் பந்த் 691 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பிரிவில் 13 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் 67 – வது செஸ் கிராண்ட் மாஸ்டராகியுள்ளார் கோவையைச் சேர்ந்த 14 வயது லியோன் மெண்டோன்கா.

மேலும் இவர், உலகின் 29-வது இளம் கிராண்ட் மாஸ்டர் (ம)

கோவையின் 2 – வது கிராண்ட் மாஸ்டர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை 2020 – ல் இந்தியாவின் 66 வது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை சென்னையை சேர்ந்த G.ஆகாஷ் பெற்றார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 11 வது இந்திய வீரர் என்ற பெருமையையும், அத்துடன் விரைவாக 6000 ரன்களை கடந்த 6 வது இந்திய வீரர் என்ற பெருமையையும் புஜாரா பெற்றுள்ளார். ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து புஜாராவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்தான் 6000 ரன்கள் இலக்கை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயலாளர் பதவியை பரத்சிங் தக்கவைத்துக் கொண்டார்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முதலாவது துணைப் பொதுச்செயலாளராக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் முன்கள வீரரான அபிஷேக் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .

Khelo India Ice Hockey போட்டியானது கார்கிலின் சிக்தனில் தொடங்கியது.

ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக் (4 வது நடுவராக) பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

கடந்த 74 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அறிமுகமான முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் அரைசதமும் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் சூழற் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

#இதுநம்மஇன்னிங்ஸ் என்ற ஹேஸ்டேக் மூலம் இந்த அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது.

இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.

SMAT 2021 எனப்படும் உள்நாட்டு டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது

காஷ்மீரில் உள்ள குல்மார்கில் நடைபெற்ற 10வது தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை அணியானது லடாக் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

அமெரிக்காவின் Ryan Crouser, அமெரிக்க ட்ராக் லீக் தொடரின் குண்டு எறிதல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் 22.82 மீட்டர் தூரத்திற்கு  எறிந்து உலக சாதனை படைத்தார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், சாம்பியன்ஸ் பட்டம் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

பெண்கள் ஒற்றையர் பிரிவுகரோலினா மரின் (ஸ்பெயின்)

ஆண்கள் ஒற்றையர் பிரிவு - விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்)

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments