நிர்வாகம் (ம) சமூக பொருளாதார வாழ்க்கை
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மைய நிர்வாகம்
ü இந்தியாவின் பெரும் பகுதியில் ஓர் உறுதியான நிர்வாகத்தை முகலாயர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
ü முகலாய நிர்வாகம் கட்டமைப்பின் உச்ச உயர்நிலைத் தலைவர் பேரரசரே ஆவார்.
ü சட்டங்களை இயற்றுபவரும் அவரே; அவற்றைச் செயல்படுத்துபவர் அவரே அவர்.
ü அவரே படைகளின் தலைமைத் தளபதி, அவரே நீதி வழங்குபவரும் ஆவார்.
ü அவருக்கு அமைச்சர் குழுவொன்று உதவியது.
ü அக்குழுவில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு
« வக்கீல் - பிரதம மந்திரி
« வஜீர் (அ) திவான் - வருவாய்த் துறை (ம) செலவுகள்
« மீர்பாக்க்ஷி - இராணுவத்துறை அமைச்சராவார்.
« மீர்சமான் - அரண்மனை நிர்வாகத்தை கவனித்தார்.
« குவாஜி - தலைமை நீதிபதி
« சதா-உஸ் சுதூர் - இஸ்லாமிய சட்டங்கள் (சாரியா) நடைமுறைப் படுத்தினார்.
மாகாண நிர்வாகம்
ü பேரரசு -> சுபாக்கள் -> சர்கார் -> பர்கானா -> கிராமம்
« சுபா - சுபேதார்
« சர்க்கார் - பவுஜ்தார்
உள்ளாட்சி நிர்வாகம்
ü நகரங்களும், பெரு நகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன.
ü முக்காடம் என்றழைக்கப்பட்டக் கிராமத் தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்ற அமைப்பினை உருவாக்கினர்.
ü அபுல் பாசல் என்னுடைய அய்னி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கானத் தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிடுகிறார்.
ü இந்திய முஸ்லீம்கள் ஷேயிக்சதாஸ் என்றழைக்கப்பட்டனர்.
ü அக்பருடைய ஆட்சிக் காலத்தில் 15 விழுக்காடுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ü ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பால் ஆகியோர் அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்களாவர்
ü ரஜபத்திரர்கள் அரசு நிர்வாகத்தில் இருந்த பல்வேறு பணியிடங்களுக்கு காயஸ்தர், கத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமித்தனர்.
ü ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் மராத்தியரைப் பிரபுக்களாக நியமித்தனர்.
ü எடுத்துக்காட்டாக சிவாஜியின் தந்தை ஷாஜி சில காலம் ஷாஜகானிடம் பணியாற்றினார்.
ü முகலாய நிர்வாகம் மேல்சாதிச் சமூகங்களிடையே நிலவிய உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது.
ü முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின்போது பணப்பரிசு "மகர்" எனும் (மணமகன் மணமகளுக்கு கட்டாயம் தர வேண்டிய பணம்) பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தனர்.
ü ஒழுக்கநெறிகளை நடைமுறைப்படுத்துவதற்கென முதாசீபுகள் என்ற உயர் அதிகாரம் படைத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு தனித் துறையை அவுரங்கசீப் ஏற்படுத்தினார்.
ü தரோக்கா தர்ஷன் என்ற பேரரசர் மணிமாடத்தில் மக்கள் முன்தோன்றும் சடங்கையும் அவுரங்கசீப் விட்டொழித்தார்.
ü அவுரங்கசீப் காலத்தில், தசரா விழாவுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
ü மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.
ü இறைப்பணியில் ஈடுபட்டுள்ள பெரியோர்க்கும், சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் அரசர் நிலங்களை வழங்கினார்.
ü வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலங்கள் சுயயூர்கள் என்றழைக்கப்பட்டன.
பொருளாதாரம்
ü முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.
ü சொத்துக்கள் வைத்துக்கொள்ள மறுக்கப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயிகள் மக்கள் தொகையில் ஏறத்தாழக் 1/4 பங்கிருந்தனர்.
ü ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர் வகைகளை அய்னி அக்பரி பட்டியலிடுகிறது.
ü கிணற்று நீர்ப்பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
ü புகையிலையும் மக்காச் சோளமும் 17-ம் நூற்றாண்டில் அறிமுகமாயின.
ü அதற்குப் பின்னரே மிளகாயும் வேர்க்கடலையும் அறிமுகமாயின.
ü அன்னாசிப்பழம் 16-ம் நூற்றாண்டில் அறிமுகமானது.
ü ஒட்டுமுறையில் பல மாம்பழ ரகங்களை போர்த்துகீசியர் வளர்த்தார்கள்.
ü உருளைக்கிழங்கு, தக்காளி, கொய்யா ஆகியவை பின்னர் வந்தன.
ü அவுரி மற்றுமொரு முகலாய கால முக்கிய வணிகப் பயிராகும்.
ü முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு நிலவரியே மிக முக்கியமான வருவாயாகும். அது விளைச்சலில் ஒரு பங்காகும்.
ü பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் தஸ்தர் என அழைக்கப்பட்டன.
ü நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற் கூடங்களைச் சார்ந்திருந்தது.
ü "கர்கானா" என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
வர்த்தகமும், வாணிகமும்
ü பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்தது.
ü பொருள்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கு "உண்டி" என்றழைக்கப்பட்ட கடன்பத்திரங்கள் உதவின.
ü ஒருங்கிணைக்கப்பட்டிருந்த "சராய்கள்" வணிகர்களின் பயணங்களை ஊக்குவித்தன.
ü குஜராத்தைச் சேர்ந்த போரா முஸ்லிம்கள், ரஜபுதனத்து மார்வாரிகள், சோழமண்டலக் கடற்கரை சார்ந்த செட்டியார்கள், மலபார் முஸ்லிம்கள் ஆகியோர் புகழ்பெற்ற வணிக சமூகத்தினர் ஆவார்.
அறிவியலும் தொழில்நுட்பமும்
ü முஸ்லிம் கல்வி நிறுவனங்களான மதரஸாக்கள் முஸ்லிம் இறையியலின் மீது அதிக கவனம் செலுத்தியது.
ü வாரணாசியில் ஜோதிடம் கற்றுத்தரப்பட்டது.
ü ஐரோப்பாவில் இருந்த பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லையென பிரான்ஸ் நாட்டுப் பயணி பெர்னியர் குறிப்பிடுகிறார்.
ü அக்பரின் அவைக்களப் புலவரான பெய்சி பாஸ்கராச்சாரியாரின் புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிபெயர்த்தார். .
ü நீர் இறைப்பதற்காக பலப் பீப்பாய்கள் இணைக்கப்பட்ட சக்கரமான பாரசீகச் சக்கரம் பாபர் காலத்தில் அறிமுகமானது.
ü விசைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நீரிறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்ரியில் நிறுவப்பட்டது.
ü வெடியுப்பை பயன்படுத்தி நீரை குளிர்விக்கும் முறையே பரவலாக்கியப் பெருமை அக்பரைச் சாரும்.
ü கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழப்படுகின்றார்.
ü தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பின்தங்கிய நிலை வெளிப்படையாக தெரிகிறது என்ற கருத்தை வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப் பதிவு செய்துள்ளார்.
ü இந்தியப்படைகளில் மேட்ச் லாக் எனப்படும் பழைய பாணியிலான துப்பாக்கிகள் அதிகமாக பயன்பாட்டில் இருந்த போது ஐரோப்பாவில் பிளின்ட்லாக் எனப்படும் நவீன துப்பாக்கிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
ü செம்பினாலான பீரங்கிகளை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
ü பதினேழாம் நூற்றாண்டில் கூட இந்தியாவில் வார்ப்பிரும்பை உற்பத்தி செய்ய இயலாமல் போனது.
கட்டிடக்கலை
ü பாபர், பாரசீகக் கட்டிட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஆக்ரா, பியானா, டோலாப்பூர் குவாலியர் மற்றும் க்யூல் (அலிகார்) போன்ற பகுதிகளில் கட்டங்களைக் கட்டுவித்தார்.
ü ஹூமாயூனின் டெல்லி அரண்மனை, தீன்-இ-பானா.
ü இது பின்னாளில் ஷெர்ஷாவினால் இடிக்கப்பட்டிருக்கக் கூடும் என அறியப்படுகிறது.
ü அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹுமாயூன் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
ü பதேப்பூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற்பகுதியும், அக்பர் சிவப்பு நிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாசாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயர் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
ü சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை மாடம் சில புத்த கட்டிடக்கலை கூறுகளையும் கொண்டுள்ளது.
ü இது அக்பரின் காலத்தில் தொடங்கப்பட்டு ஜஹாங்கீர் காலத்தில் நிறைவு பெற்றது.
ü இதிமத் உத் தௌலாவுக்காக எழுப்பிய கல்லறையே முழுவதும் வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் முகலாயர் கட்டிய முதல் கட்டடமாகும்.
ü அதன் சுவர்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை அலங்கார வேலைகளுக்கு பியட்ரா டியூரா என்று பெயர்.
ü ஷாஜகான், ஷாஜகானாபாத் என்ற பெயரில் ஒரு நகரத்தையே (இன்றைய பழைய தில்லி) உருவாக்கினார்.
ü இங்குதான் செங்கோட்டையும் ஜும்மா மசூதியும் அமைந்துள்ளன.
ü அந்த மசூதியின் நுழைவாயில் புலந்த்தர்வாசா அல்லது உயர்ந்த நுழைவாயில் எனப்படுகிறது.அதன் உயரம் 176 அடியாகும்.
ü சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை அக்பரால் கட்டப்பட்டது.
ü லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள செங்கோட்டை பேரரசர்களின் வாழ்விடமாகும்.
ü இக்கோட்டை சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.
ü இது 1639ல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும்.
ü திவான்-இ-காஸ், திவான்-இ- ஆம், பஞ்ச் மஹால் (பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டடம்) ரங் மஹால் ஆகியவை ஷாஜகானின் படைப்புகளே.
ü ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் கோட்டைகளை கட்டும் பணி அதன் உச்சியைத் தொட்டது.
ü ஔரங்கசீப் காலத்தில் லாகூரில் பாதுஷாகி மசூதி கட்டப்பட்டது.
ü ஔரங்கசீப்பின் மகன் ஆஜாம் ஷாவால் தம் தாயின் அன்பைப் போற்றும் வகையில், ஒளரங்காபாத்தில் ரபீயா உத் தௌ ராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது.
ü இக்கல்லறை பீபிமக்பாரா (பெண்ணின் கல்லறை) என்றழைக்கப்படுகிறது.
ü ஜஹாங்கீர் ஷாஜகான் ஆகியோர் உருவாக்கிய ஷாலிமர் தோட்டங்கள் இந்தியத் தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்கவை.
ü பொதுப்பயன்பாட்டிற்காகவும் பல கட்டுமானப் பணிகளை முகலாயர் மேற்கொண்டார்.
ü அவற்றுள் மகத்தானது ஜான்பூரில் கோமதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளப் பாலமாகும்.
ü முகலாயர் மிகவும் போற்றத்தக்கச் சாதனை தில்லிக்கு நீர் கொண்டுவரும் மேற்கு யமுனா கால்வாயைக் கட்டியதாகும்.
ü மதுராவுக்கு அருகே பிருந்தாவனத்தில் உள்ள கோவிந்தேவ் கோவிலிலும்,
ü மத்தியப்பிரதேசம் ஓரிசாவிற்கு அருகேயுள்ள சதுர்டிஜ் என்னும் இடத்திலுள்ள பீம்சிங் கோவிலிலும் முகலாயக் கட்டிடக்கலையின் தாக்கத்தைக் காணலாம்.
ஓவியம்
ü மத்திய ஆசியாவிலிருந்து ஹுமாயூனோடு இந்தியா வந்த நுண் ஓவியக் கலைஞர்கள் அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்திய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர்.
ü அக்பரது ஆட்சிக் காலத்தில் இவ்விரு ஓவியர்களும் புகழ்பெற்றுத் திகழ்ந்தனர்.
ü அய்னி அக்பரியிலும் பல ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
ü தஷ்வந்த், பசவன், மிஸ்கினா ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்களாவர்.
ü ஹம்சா நாமா எனும் நூலில் 1200 ஓவியங்கள் இருந்தன.
ü இந்திய வண்ணங்களான மயில் கழுத்து நீலம், இந்திய சிகப்பு போன்றவற்றையும் ஓவியர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
ü ஐரோப்பிய ஓவியங்கள் போர்த்துகீசியப் பாதிரிமார்களால் அக்பரின் அவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
ü ஜஹாங்கீர் காலத்தில் உருவப் படத்தை வரைதலும் விலங்குகள் வரைவதும் வளர்ச்சி பெற்றன.
ü இத்துறையில் மன்சூர் பெரிதும் அறியப்பட்ட வருவார்.
ü முகலாய நுண்ணோவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியர் ரெம்பிரான்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
இசையும், நடனமும்
ü பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியர் சேர்ந்த தான்சேன் ஏனைய 35 இசைக் கலைஞர்களோடு அக்பரால் ஆதரிக்கப்பட்டார் என அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது.
ü ஜஹாங்கீர் ஷாஜகான் இசையை ஆதரித்தவர்களே.
ü ஔரங்கசீப் காலத்தில்தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன. அவருடைய அரசிகளும் இளவரசிகளும் பிரபுக்களும் தொடர்ந்து இசைக்கு ஆதரவு தந்தனர்.
ü பிற்கால முகலாய அரசர்களில் ஒருவரான முகமது ஷா இசை துறையில் முக்கிய வளர்ச்சிகள் ஏற்படக் காரணமாக இருந்தது.
ü பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இசைக்கருவிகள் பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
இலக்கியம்
ü பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் முகலாயர் காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது.
ü முகலாயப் பேரரசில் தக்காண அரசுகளுக்கு பாரசீக மொழி நிர்வாக மொழியாக இருந்தது.
ü புவியியல், புவியியல், பண்பாடு ஆகியவற்றின் மீது 'அய்னி அக்பரி' கொண்டுள்ள அக்கறைக்காகவே அது பாராட்டப்பட வேண்டும்.
ü அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஷாஜகான் வாழ்க்கை வரலாறு பாதுஷா நாமா அய்னி அக்பரியை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டதே.
ü ஔரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி ஆலம்கீர் நாமா என்னும் நூலை எழுதிய முகமது காஸிம் இதே முறையைத்தான் பின்பற்றினார்.
ü ஷாஜகான் நாமாவைப் படைத்தவர் இனாயத்கான்.
ü பாபரின், சகாட்டி துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை அப்துல் ரகீம் கான்-இ-கானான் என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார்.
ü அப்துர் ரகீம் கான்-இ-கானான் என்பவர் வாழ்க்கை குறித்த, மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப் பாடல்கள் இந்தியின் கிளை மொழியான பிரிஜி என்னும் வடிவத்தில் எழுதினார்.
ü தபிஸ்தான் என்னும் நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைகள், அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்துப் பாரபட்சமற்ற விபரங்களைக் கொண்டுள்ளது.
ü தாராஷூகோவால் உபநிடதங்கள் சர்-இ-அக்பர் (மாபெரும் ரகசியம்) என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக்கும்.
ü அபுல் பெய்சி மஸ்னவி, உத்பி, நசிரி ஆகியன இந்தியாவில் பாரசீகக் கவிதைகளுக்கு வளம் சேர்த்தது..
ü கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய ராஜவலிபதகா எனும் நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் பிரக்ஞபட்டரால் தொகுக்கப்பட்டது.
ü அக்பரின் வானியலறிஞரான நீலகண்டர், தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தார்.
ü ஷாஜகானின் அவைக்களப் புலவரான ஜெகநாத பண்டிதர் 'ரசகங்காதரா' எனும் சிறப்புக்குரிய நூலை எழுதினார்.
ü செய்யுள் முறையிலான தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற மிகச் சிறந்த பாடல்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன.
ü கிழக்கு உத்திரப் பிரதேசத்து மக்கள் பேசிய இந்தி மொழியின் வட்டார மொழியான அவதியில் துளசிதாசர் எழுதிய பாடல்கள் அவற்றின் பக்திச் சிந்தனைகளுக்காகப் பிரபலமாயின.
ü ஏகநாதர், துக்காராம், ராம்தாஸ், முக்தீஸ்வர் ஆகியோரின் இலக்கியப் படைப்புகளால் மராத்திய இலக்கியம் எழுச்சி பெற்றது.
ü முக்தீஸ்வர் மகாபாரத்தையும் இராமாயணத்தையும் இலக்கிய வளம் கொண்ட மராத்திய மொழியில் எழுதினார்.
ü ஏனைய மொழிகளின் மீதான சமஸ்கிருதத்தின் மேலாதிக்கத்தை ஏக்நாத் கேள்விக்குள்ளாக்கினார்.

1 Comments
Super
ReplyDelete