பழங்குடியினர் கிளர்ச்சிகள் - பாகம் 1 (கோல் கிளர்ச்சி)

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பழங்குடியினர் கிளர்ச்சிகள்

ü  ஆங்கிலேயர்கள் 1865ஆம் ஆண்டு முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

ü  வனங்களை வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆங்கிலேய ஆட்சியில் ஊக்கம் கிடைத்தது.

ü  அதனால் பழங்குடியினர் பகுதிகளில் பழங்குடியினர் அல்லாதோரான வட்டிக்கு பணம் கொடுப்போர், வர்த்தகர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் டுருவுவதற்கு அது ஊக்கம் தந்தது.

ü  சுள்ளி எடுப்பது, கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருட்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடைவிதித்தது.

ü  கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம், 1871-இல் இயற்றப்பட்டது.

ü  1878ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது. நன்செய்மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன.

ü  பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சி முறை விவசாயம் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வனப்பகுதிகளை தள்ளி வைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ü  பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம்.

ü  கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்த(விசாகப்பட்டினம் மற்றும் கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த) ஆதிவாசி பகுதிகளை தனது இல்லமாக கருதிய அவர்அங்கிருந்து ஆதிவாசிகளுக்காக உழைத்தார்.

ü  அல்லூரி சீதாராம ராஜு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிவாசிகள்கடுமையான வறுமையில் வாடினார்கள்.

ü  மான்யம் (என்றழைக்கப்பட்ட வனப்பகுதியில்) காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ராம்பாபகுதி ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு போராடியதால் அவரது உயிரைக்குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

ü  ராம்பாஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922-24) மலபார் காவல்துறையின் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது.

ü  வனவாசிகளின் நலனுக்காகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு தியாகி ஆனார்.

பழங்குடியினர், யார் அவர்கள்?

ü  இந்தியாவில் பழங்குடியினர் என்ற வார்த்தையின் நவீன பயன்பாடு சாதிய அடிப்படையில் எஞ்சிய இந்திய சமூகத்தை விடுத்து அவர்களின் அடையாளத்தை விவரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது.

ü  அவ்வப்போது தனிப்பட்ட குழுக்களை குறிப்பதற்காக இந்த வார்த்தைப் பெரிதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

ü  இந்தியாவில் உள்ள பழங்குடியினர் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

ü  இந்திய வேளாண்மைச் சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள்  இடம்பெயர் வேளாண்மை முறையை பின்பற்றினர்.

கோல்களின் கிளர்ச்சி (1831 - 32)

ü  கோல் என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர்.

ü  சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களை பழங்குடி அல்லாதவருக்கு குத்தகைக்கு விட்டது கோல் கிளர்ச்சிக்கு உடனடி காரணம்.

ü  சோன்பூர், மர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்.

ü  கோல்கள் இனத்தவர்கள் உயிர்சேதம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இருந்தும் பணம் கொடுப்பவர் மற்றும் வர்த்தகர்கள் கொல்லப்பட்டனர்.

ü  கொள்ளையடிப்பதும் சொத்துக்களுக்கு தீ வைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழி முறைகளாக இருந்தன.

ü  பழங்குடி இன தலைவர்கள் தங்கள் கிளர்ச்சி பற்றிய செய்தியை மேளங்களை முழங்கியும், அம்புகளை எய்தும், வெளியாட்களை வெளியேற செய்யும் எச்சரிக்கைகளை செய்தும் பரப்பினர்.

ü  1831 டிசம்பர் 20, சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா 700 கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது.

ü  1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

ü  மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத் கொல்லப்பட்டார்.

ü  துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இடையே ஓராயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டது

ü  கோல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19-ஆம் நாள் சரண் அடைந்ததும் கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.

Print Friendly and PDF

Post a Comment

0 Comments