டெல்லி சுல்தானியம் - அடிமை வம்சம்

அடிமை வம்சம் (1206-1290)

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

 

ü  இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி, முகமது கோரியால் பொ.ஆ 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

ü  அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால், பன்டகன் எனும் தனிவகை அடிமைகளைப் பேணினார்.

v  பன்டகன் ---> இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்

v  பண்டகன் என்பது பண்ட என்பதன் பன்மையாகும்; இச்சொல்லுக்குப்படை அடிமைஎன்று பொருள்.

v  வட இந்தியாவில் குரித் பண்டகன்,மொய்சுதீன் கோரியின் அடிமைகளாவர்.

v  அடிமைகள், தங்களது எஜமானர்களின் நிஸ்பாவைக் கொண்டிருந்தனர்;

v  எனவே மொய்சுதீன் அடிமை, மொய்சு எனும் நிஸ்பாவைக் கொண்டிருப்பார்;

v  சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை, ஷம்ஸி பண்டகன்என்று குறிப்பிடப்படுவார்.

ü  1206இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக, தன்னை அறிவித்துக்கொண்டார்.

ü  ஆனால் அவரது மாமனார் இல்திஸ், ஆட்சிக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தார்.

ü  அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை, அவர் நாட்டினார்.

ü  இவ்வரச மரபு "மம்லுக்"அரச மரபென்றும் அழைக்கப்பட்டது.

v  மம்லுக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும்.

v  இது, ஓர் அடிமை என்பதற்கான அரபுத் தகுதிப் பெயருமாகும்..

ü  குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன் ஆகிய மூவரும், இவ்வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் ஆவர்.

ü  அடிமை வம்சத்தினர் இத்துணைக்கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

ü  இக்காலத்தில், மூன்று மரபுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை,

1.   குத்புதீன் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206 - 1211வரை) .

2.   இல்துத்மிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 - 1266 வரை)

3.   பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266 - 1290 வரை)

குத்புதீன் ஐபக் (1206 - 1210)

ü  குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்.

ü  பின்னர், தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.

ü  டெல்லியில் ஆட்சிபுரிந்தவரை, செயல்திறன் மிக்கவராகச் செயல்பட்டுப் பல புதிய பகுதிகளைக் கைப்பற்றினார்; கலகங்களை ஒடுக்கினார்.

ü  மத்திய மற்றும் மேற்கு சிந்து - கங்கைச் சமவெளிப்பகுதிகளுக்குத் தானே தலைமையேற்றுப் படைநடத்திச்சென்று பலபகுதிகளைக் கைப்பற்றினார்.

ü  கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கில்ஜிஎன்பாரிடம் ஒப்படைத்தார்.

ü  ஐபக், டெல்லியில் குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித் எனும், மசூதியைக் கட்டினார்.

ü  அதுவே, இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது.

ü  முஸ்லீம் எழுத்தாளர்கள் ஐபக்கை, லாக் பக்ஷ் என அழைக்கின்றனர். அவர்களுக்கு தாரளமாக கொடைகளை வழங்கியதால், அவ்வாறு அழைக்கப்பட்டார்.

ü  ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை ஐபக் ஆதரித்தார்.

ü  சூஃபித்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் என்பவரின் பெயரில், குதுப்மினாருக்கு அவரே அடிக்கல் நாட்டினார்.

ü  அவருடைய மருமகனும், அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான இல்துமிஷ்,குதுப்மினாரைக்கட்டி முடித்தார்.

ü  போலோ விளையாட்டின்போது, குதிரையிலிருந்து தவறி விழுந்ததில், படுகாயமடைந்த ஐபக், 1210இல் இயற்கை எய்தினார்.

இல்துமிஷ் (1210 -1236)

ü  ஐபக்கின் மகன் ஆரம் ஷா திறமையற்றவராக இருந்தார்.

ü  எனவே துருக்கியப் பிரபுக்கள் ஐபக்கின் படைத்தளபதியும் மருமகனுமான இல்துமிஷைச் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.

ü  இல்பாரி குலத்தைச் சேர்ந்தவர் இல்துத்மிஷ். எனவே அவரது அரசு குலம் இல்பாரி குலம் எனப்பட்டது.

ü  லாகூரிலும், முல்தானிலும் நசுருதீன் குபச்சாவின் படையை எதிர்த்து வெற்றிபெற்றார்.

ü  வங்க ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தார்.

ü  இல்துமிஷ் கலகக்காரர்களை ஒடுக்கி ஆட்சிப்பகுதிகளின் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதியாக நிறுவினார்.

ü  இவருடைய ஆட்சியின் போதுதான் மங்கோலியர்கள். செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை (வடஇந்தியா) அச்சுறுத்தினர்.

ü  மங்கோலியர்களின் தலைவனான செங்கிஸ்கான்என்று அனைவராலும் அழைக்கப்படும், தெமுஜின் மத்திய ஆசியாவின் மீது படையெடுப்பைத் தொடங்கியிருந்தார்.

ü  அங்கு குவாரிசம் ஆட்சியாளரான,ஜலாலுதீன் மங்கபர்னி என்பவரை முறியடித்தார்.

ü  செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த. குவாரிஜம் ஷா ஜலாலுதீன் என்பார் இல்துமிஷிடம் அடைக்கலமும், பாதுகாப்பும் கேட்டிருந்தார்.

ü  அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்ததன் மூலம், இல்துமிஷ் மங்கோலிய. ஆபத்தைத் தவிர்த்தார்.

ü  மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால், அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார்.

ü  அக்குழு, "சகல்கானி" அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.

ü  இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு, 'இக்தாக்களை(நிலங்கள்) வழங்கினார்.

v  "இக்தா" என்பது , ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.

ü  நிலத்தைப் பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி என்றழைக்கப்பட்டார்.

ü  இவர், போர்க்காலங்களில் சுல்தானுக்கு ராணுவ உதவிகள் செய்ய வேண்டும்.

ü  தனது படைகளையும், குதிரைகளையும் பராமரிப்பதற்காக, இக்தாதார் தனக்கு வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து, வரிவசூல் செய்துகொள்வார்.

ü  இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடமான, (243 அடி) குதுப்மினாரை கட்டி முடித்த அவர், ஆஜ்மீரில் அழகிய மசூதி ஒன்றையும் கட்டினார்.

ü  1229ஆம்ஆண்டு, காலிப்பிடம் இருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அவர் இந்தியாவின் சட்டமுறையான ஆட்சியாளரானார்.

ü  மின்ஹஜ்-உஸ்-சிராஜ், தாஜுதின், நிசாம் உல் முல்க், முகமது ஜெய்னதி, மாலிக் குத்புதீன் ஹசன், பக்ருல் முல்க் ஈசாமி போன்றோர், அவரது காலத்தில் வாழ்த்து, அவரது அவையை அலங்கரித்த அறிஞர்கள்.

ü  இந்தியாவில் அராபிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் இல்துத்மிஷ்.

ü  175 கிராம் எடைக் கொண்ட வெள்ளி தாங்கா என்ற அவரது நாணயம், இடைக்கால இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டது.

ü  தற்காலத்திய ரூபாய்க்கு, அவரது வெள்ளி நாணயமே அடிப்படை என்று கூறலாம்

ü  இருபத்தாறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இல்துமிஷ், 1236 ஏப்ரல் மாதம் இயற்கை எய்தினார்.

ரஸ்ஸியா (1236-1240)

ü  இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன், ருக்குதீன் பிரோஷ் மரணமுற்றதால், இல்துமிஷ் தனது மகளான ரஸ்ஸியா சுல்தானாவைத் தனக்குப் பின்னர், டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார்.

ü  ரஸ்ஸியா திறமையுள்ளவரும், மனவலிமை கொண்ட வீராங்கனையுமாவார்.

ü  அவர், துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால், துருக்கியப் பிரபுக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.

ü  அதே நேரத்தில், பஞ்சாபின் மீதான மூர்க்கம் நிறைந்த மங்கோலியரின் தாக்குதலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.

ü  ரஸ்ஸியா,ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து, அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கினார்.

ü  அவரை, குதிரை இலாயப் பணித்துறைத் தலைவராக, (அமீர் இ அகுர்) ஓர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார்

ü  அப்போக்கு, துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்யக் காரணமாயிற்று.

ü  1240ஆம்ஆண்டு, அல்தூனியா என்ற படிண்டாவின் ஆளுநர், ரசியாவுக்கெதிராக கிளர்ச்சியிலீடுபட்டார்

ü  அவருக்கு எதிராகத் துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால், 1240இல் ரஸ்ஸியா கொலையுண்டார்.

கியாசுதீன் பால்பன் (1266-1287)

ü  ரஸ்ஸியாவிற்குப் பின்னர், வலிமை குன்றிய மூன்று சுல்தான்கள் ஆட்சிபுரிந்தனர்.

ü  ரசியாவின் வீழ்ச்சி நாற்பதின்மர் குழுவின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

ü  அடுத்த ஆறு ஆண்டுகள் பஹ்ரம் மற்றும் மசூத் இருவரும் டெல்லியை ஆண்டனர்.

ü  1246ல்பால்பன் இல்துத்மிஷின் இளைய மகனான நசிருதீன் முகமதுவை சுல்தானாக நியமித்தார்.

ü  1254இல், வடமேற்கில், ஷிவாலிக் ஆட்சிப் பகுதிகளின் தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றினார்.

ü  உலுக் கான், இல்துமிஷ் ஆட்சியின்போது அடிமையாகவும், இளைஞராகவும் இருந்தவர்.

ü  அவர் (சுல்தானுக்குத் துணையாக இருந்த) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்று பொருள்படும், நயிப்-இ முல்க்என்று பட்டம் சூட்டிக்கொண்டார்.

ü  கி.பி.1265இல் நசீருத்தீன் முகமது இறந்த பிறகு, 1266இல் சுல்தான் கியஸ் அல் தின் பால்பனாக, தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.

ü  அவர்கள் 'தெய்வீக உரிமைக் கோட்பாட்டில்'நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார்.

ü  பால்பனின் கருத்துப்படி, அரசன் 'இறைவனின் நிழல் போன்றவன்', 'இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவன்'.

ü  பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார்.

v  பைபோஸ் முறைப்படி, மன்னரைச் சந்திக்க வருபவர், அவரது காலை முத்தமிட்டு வணங்க வேண்டும்.

ü  நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவை ஆடம்பரமாக கொண்டாடினார்.

ü  "நாற்பதின்மர்" குழுவை ஒழித்தார்.

ü  தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும், இடையூறாய் இருப்போரையும் கண்டறிய, ஒற்றர் துறையொன்றை நிறுவினார்.

ü  அரசு அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கடுமையாகக் கையாண்டார்.

ü  பதுவான் மாகாண ஆளுநரான, மாலிக் பக்பக் என்பவரை அரசு பணியாளர்களை துன்புறுத்தினார் என்ற காரணத்திற்காக, பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுத்தார்.

ü  அயோத்தியின் ஆளுநரான ஹேபத்கான், குடிபோதையில் இருந்தவனைக் கொன்றான், என்ற காரணத்திற்காக தண்டித்தார்.

ü  படிண்டாவின் ஆளுநர் ஷெர்கான்,விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

ü  திவானி அர்ஸ் என்ற ராணுவ துறையை ஏற்படுத்தி, ராணுவ நிர்வாகத்தைச் சீரமைத்தார்

ü  1279இல் பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால், வங்காள மாகாண ஆளுநராக இருந்த, துக்ரில்கான் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

ü  பிறகு, வங்கத்தின் ஆளுநராக, பால்பனின் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார்.

ü  பால்பன் இறந்த பிறகு, புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாட்சியாகப் பிரிந்து போனாரேயன்றி, தந்தையின் அரியணையைக் கோரவில்லை.

ü  எதிரிகளான மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள்(வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர முஸ்லீம் இனத்தினர்) போன்றோரிடம் கருணையில்லாமல் நடந்துக்கொண்டார்.

ü  தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை, பாரனி குறிப்பிடுகிறார்.

ü  இந்தத் தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டன; புதிய சாலைகள் அமைக்கப்பட்டன; காடழிக்கப்பட்ட புதிய நிலங்கள், புதிதாகப் படையில் சேர்ந்த ஆஃப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக (மஃப்ருஸி) வழங்கப்பட்டு, அவை பயிரிடப்பட்டன.

ü  வணிகத் தடங்களையும் கிராமச் சந்தைகளையும் பாதுகாக்கப் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.

ü  இருந்தபோதிலும், மங்கோலியர்களுடன் இணக்கமான உறவைப் பராமரிப்பதில் கவனத்துடன் செயல்பட்டார்.

ü  செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து, "மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்" எனும் முக்கியப் உறுதிமொழியைப் பால்பன் பெற்றார்.

ü  இதை, 1259இல் டெல்லிக்கு ஒரு நல்லெண்ணக் குழுவை அனுப்பிவைத்து, ஹுலுக்கான் குறிப்பால் உணர்த்தினார்.

ü  மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து, நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பால்பன், பல கோட்டைகளைக் கட்டினார்.

ü  மங்கோலிய தாக்குதல்களிலிருந்து, எல்லைப் பகுதிகளை காப்பதற்காக, தனது விருப்பத்திற்கு உரிய மகன் முகம்மது கானுக்கு, முல்தானின் ஆளுநர் பொறுப்பை அளித்திருந்தார்.

ü  ஆனால், மங்கோலியர்களுக்கு எதிரான போரில் முகம்மது கொல்லப்பட்டார்.

ü  பாரசீகத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ரு என்பாரைப் பால்பன் ஆதரித்தார்.

ü  பால்பன் 1287இல் மரணமுற்றார்.

v  பால்பன், ஓர் அடிமையாக, தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக, வேட்டைக்காரனாக, தளபதியாக, இராஜதந்திரியாக, சுல்தானாக வாழ்ந்தவர். அதோடு டெல்லி  சுல்தான்களில் குறிப்பிடத்தக்கவர்-லேன் பூல்

ü  பால்பனின் மகனான, கைகுபாத் திறமையற்றவராக இருந்தார்.

ü  1290இல் படைத்தளபதியாய்ப் பணியாற்றிய, மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசப்பிரதிநிதியாகப் (நாயிப்) பொறுப்பேற்றார்.

ü  சுல்தான் கைகுபாத்தின் பெயரால் அவர் நாட்டையாண்டார்.

ü  பின்னர் ஒரு நாளில், ஜலாலுதீனால் அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவரால், கைகுபாத் கொல்லப்பட்டார்.

ü  அதன் பின்னர், ஜலாலுதீன் முறையாக அரியணை ஏறினார்.

ü  அவரிலிருந்து, கில்ஜி வம்சத்தின் ஆட்சி தனது தொடங்கிற்று.

Print Friendly and PDF

Post a Comment

0 Comments