பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கேடா(கைரா)சத்தியாகிரகம்- 1918
ü கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச் சந்தித்தனர்.
ü 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில், இடையராத பஞ்சத்தின் காரணமாக விவசாயம் பொய்த்தது.
ü இதனால் விவசாயிகள் நில வருவாய் வசூலை ரத்துசெய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
ü அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர்.
ü ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு துன்புறுத்தினர்.
ü பிளேக் நோயாலும், அதிக விலையேற்றத்தாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) உதவி கோரி அணுகினர்.
ü ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
ü இதன் விளைவாக கேடா மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் வரிகொடா இயக்கத்தை தொடங்கினர்.
ü அவ்வியக்கத்திற்கு காந்தியடிகள் தலைமை ஏற்றார்.
ü பஞ்சத்தின் நிலைகளை அரசுக்கு எடுத்துக்கூறி முழு பலத்துடன் சத்தியாகிரக முறையில் போராடும்படி காந்திஜி விவசாயிகளை ஆயத்தப்படுத்தினார்.
ü இளம் வழக்கறிஞரான வல்லபாய் பட்டேலும், இந்துலால் நாயக்கும் காந்தியடிகளுடன் இந்த இயக்கத்தில் இணைந்து விவசாயிகளை உறுதியாக இருக்குமாறு வேண்டினர்.
ü மேலும், காந்திஜி விவசாயிகள் அச்சமின்றி எல்லா எதிர்ப்புகளையும் சந்திக்க ஊக்கமளித்தார்.
ü அவரது அழைப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளின் ஆதரவு இருந்தது.
ü இக்காலக் கட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியமான தலைவராக உருவானார்.


0 Comments